top of page

அடிப்படைச்  செபங்கள் 

சிலுவை அடையாளம்


  தந்தை, மகன் தூய ஆவியாரின் பெயராலே. ஆமென் 

 

--------------------------

விசுவாசப்பிரமாணம்

விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த / எல்லாம் வல்ல
தந்தையாகிய / கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய / இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவர் தூய ஆவியாரால் கருவுற்று / தூய கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு / சிலுவையில்
அறையப்பட்டு / இறந்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி / மூன்றாம்
நாள் / இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகம் சென்று / எல்லாம் வல்ல
தந்தையாகிய / கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து /
வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் / தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார். தூய ஆவி
யாரை நம்புகிறேன். தூய கத்தோலிக்கத் திருச்சபையையும் / புனிதர்களுடைய
சமூக உறவையும் நம்புகிறேன். பாவ மன்னிப்பை நம்புகிறேன். உடலின் உயிர்ப்பை
நம்புகிறேன். நிலை வாழ்வை நம்புகிறேன் - ஆமென்.

இயேசு கற்றுத்தந்த இறைவேண்டல் 


  விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே! உமது பெயர் தூயது எனப்போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல் மண்ணுலகிலும் நிறைவேறுக! எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்  - ஆமென்.

மங்கள வார்த்தை மன்றாட்டு


    அருள் மிகப்பெற்ற மரியே வாழ்க!ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே! உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே!
     தூய மரியே ! இறைவனின் தாயே! பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். 
ஆமென்

 ---------------------------------

மூவொரு இறைவன் புகழ் 


   தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக. 
    தொடக்கத்தில் இருந்தது போல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. 
ஆமென். 

 ---------------------------------

பாத்திமா ஜெபம்

ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.

எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும்.

எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும்.

உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.

 ---------------------------------

மிக்கேல் அதிதூதரை நோக்கி செபம்


அதிதூதரான புனித மிக்கேலே, எங்கள் போராட்டத்தில் எங்களை காத்தருளும்.  பசாசின் வஞ்சக சூழ்ச்சிகளில் எங்கள் துணையாயிரும். தாழ்மையான எங்கள் மன்றாட்டைக்கேட்டு இறைவன் பசாசைக்கண்டிப்பாராக!


நீரும், விண்ணக படையின் தலைவரே, மக்களைக்கெடுக்க உலகில் சுற்றித்திரியும் பேயையும் மற்ற கெட்ட அரூபிகளையும் இறை வலிமையால் நரகத்தில் தள்ளுவீராக. 
ஆமென்

221-2213205_biblical-the-bible-is-at-the

App Link 

Bible Versus & Prayer

1. Iraiputhaham by

Rev. J. N. Mariaratnam - https://apps.apple.com/au/app/iraiputhaham/id1019334920

2. Tamil Catholic Prayer Book by Joseph Stalin Alucious Selvaraj
https://apps.apple.com/au/app/tamil-catholic-prayer-book/id1135714632

3. Tamil-English Bilingual Audio Holy Bible by li liangpu
https://apps.apple.com/au/app/tamil-english-bilingual-audio-holy-bible/id982160693

Holy-Bible-PNG-Image-97236.png

Perth Tamil Catholic Community

©2019 by Perth Tamil Catholic Community. Proudly created by ThinkBuzz

bottom of page